இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
டில்லி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் பக்கத்து கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த டிவிஎஸ் அப்பாச்சி வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட டில்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
அப்பாச்சி வாகனத்தில் வந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





