சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு..!
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு இருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் தேவாராயபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பகவதி சிக்கன் ரைஸ் வாங்கி சென்று தாய், தாத்தா சண்முகம் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளார்.
அதனை சாப்பிட்ட நதியா, சண்முகம் இருவருக்கும் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவர்கள் ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் சேலத்தில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு சிக்கன் ரைஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





