--- --:--:-- --

சேதமடைந்த ரேஷன் அரிசி மூட்டைகள்.. பள்ளிகளுக்கு அரிசி வழங்க முடியாத சோகம்..!

8

ங்கராபுரம் நுகர் பொருள் வாணிப செயல் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சமத்துவபுரம் பகுதியில் தமிழ்நாடு முழுவதும் பொருள் வாணிப வட்ட செயல்முறை கிடங்கு அமைந்துள்ளது.

 

இங்கிருந்து 150 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகள் அரசு பள்ளிகள் மற்றும் உண்டு உறை விட பள்ளிகளுக்கு ரேஷன் அரிசி மற்றும் பருப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் சேதமடைந்துள்ளது.

 

கருப்பு வண்டுகள் பிடித்து தூசி படிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon