--- --:--:-- --

மது அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரழப்பா..?

4

யிலாடுதுறை அருகே டாஸ்மாக் மது அருந்தியதால் இரண்டு பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூரில் பழனி குருநாதன் என்ற இரும்பு பட்டறை நடத்தி வந்தார். அவரிடம் பூராசாமி என்பவர் பணியாற்றி வந்தார்.

 

இருவரும் பட்டறையில் மயங்கி கிடந்ததாகவும் அவர்களுக்கு அருகில் இரண்டு டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர்கள் முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் பட்டறையிலிருந்து மது பாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர். இருவருக்கும் குடும்பத்தில் பிரச்சனையோ நோய்களோ இல்லை என்றும் டாஸ்மாக் மது குடித்ததால் தான் இருவரும் உயிர் இழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Right Menu Icon