குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து..!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் 3 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி பேருந்தில் இருந்து குழந்தைகள் இறங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மற்றும் மினி டெம்போ மீது மோதியது.
லாரி மோதிய வேகத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி பேருந்து சாலை அருகே இருந்த குடியிருப்புக்குள் புகுந்தது. பேருந்தில் இருந்து இறங்கி கொண்டிருந்த மூன்று குழந்தைகள், பேருந்து ஓட்டுநர், உதவியாளர் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்ற ஏழு பேர் காயமடைந்தனர்.
விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.





