அரிய நோய்க்கு சிகிச்சை.. சமந்தா முதல் முறையாக பொது இடத்திற்கு வந்த வீடியோ
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு myositis என்ற அரிய வகை நோய் வந்ததால் தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
அதற்காக அவர் வெளிநாட்டிற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியானது. சமந்தா சிகிச்சையில் இருக்கும்போது வெளியிட்ட ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது சமந்தா இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்திருகிறார். அதன் வீடியோ தற்போது படுவைரல் ஆகி இருக்கிறது. ஸ்டைலான உடையில் அவர் மெதுவாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்து சமந்தா ரசிகர்கள் கலக்கமடைந்து இருக்கின்றனர். கமெண்டில் ‘விரைவில் குணமடைய வாழ்த்து’ தெரிவித்து வருகின்றனர்.






