--- --:--:-- --

கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

1

தி கனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார்வளைகுடா தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon