மலையாள சினிமாவில் பிரபல நடிகர் தற்கொலை..!
மலையாள சினிமாவில் ஹிட் ஆன அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து இருந்த சரத் சந்திரன் என்ற நடிகர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அது தற்கொலை என்கிற கோணத்தில் தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது மரணத்தை நடிகர் ஆண்டனி வர்கீஸ் போட்டோ வெளியிட்டு உறுதி செய்தார்.இந்நிலையில் தற்போது சரத் சந்திரன் தற்கொலைக்கு முன் எழுதி இருக்கும் கடிதம் சிக்கி இருக்கிறது. அதில் அவர் தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் தான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இந்த விபரீத முடிவுக்கு அது தான் காரணம் எனவும் தெரிவித்து இருக்கிறார்.





