--- --:--:-- --

பதவியை ராஜினாமா செய்த திருப்பூர் சுப்ரமணியன்..!

12.1

மிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சுப்ரமணியம். அவர் லியோ ரிலீஸ் நேரத்தில் அளித்த பேட்டிகள் சர்ச்சை ஏற்படுத்தியது. லியோ தயாரிப்பாளர் சொன்ன வசூல் விவரங்கள் பொய், தியேட்டர் காரர்களுக்கு நஷ்டம் தான் என அவர் பேட்டி அளித்து இருந்தது.

 

அதனால் அப்போது இருந்தே விஜய் ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர். மேலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன டைகர் 3 படத்தை திருப்பூர் சுப்ரமணியத்திற்கு சொந்தமான தியேட்டரில் அனுமதி இன்றி காலை 7 மணிக்கும் இரவு 11.50க்கு காட்சி திரையிட்டதாக நெட்டிசன்கள் ட்விட்டரில் ஆதாரத்துடன் புகார் கூறினார்கள்.

அதனால் அவரிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசின் வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.இந்நிலையில் தற்போது திருப்பூர் சுப்ரமணியன் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

 

சொந்த வேலை காரணமாக பதவி விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ‘நானும் மனிதன் தான், 100% தவறு இல்லாமல் இருக்க முடியாது’ எனவும் இந்த சர்ச்சை பற்றி கூறி இருக்கிறார் அவர்.

Right Menu Icon