--- --:--:-- --

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்..!

4

டுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 6 மற்றும் 7ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Right Menu Icon