மருந்தகத்தில் புகுந்து திருடிவிட்டு சிசிடிவிக்கு பிளையிங் கிஸ் கொடுத்த கொள்ளையன்..!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மருந்தகத்தின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த திருடன் சிசிடிவி கேமராவுக்கு டாடா காட்டி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவை பார்த்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.






