--- --:--:-- --

மாற்றுத்திறனாளி சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்..!

10

கேரளாவில் தெருநாய்கள் கடித்த குதிரியதில் மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணுரை சேர்ந்த நீவால் நவ்ஷா என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை காணாமல் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

 

அப்பொழுது வீட்டில் இருந்து சற்று தொலைவில் ரத்த வெள்ளத்தில் இருந்து சிறுவனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் தொடை பகுதியை தெருநாய்கள் கடித்து குதறிய நிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் சத்தம் போட முடியாமல் துடிதுடித்துள்ளான்.

 

இதனை தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான்.

 

Right Menu Icon