உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் இருந்த புழு..!
சேலத்தில் சாம்பார் சாதத்தில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம் அட்வைஸ் ஆசிரமம் சாலையில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான உணவகம் இயங்கி வந்துள்ளது.
இங்கு வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சாம்பார் சாதத்தில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. சுகாதாரமின்றி உணவகம் இயங்கி வந்ததை உறுதி செய்து உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர்.





