--- --:--:-- --

வேறொரு ஆணுடன் பைக்கில் சென்ற மனைவி.. கடுப்பாகி காரை ஏற்றிய கணவன்..!

7

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வாழும் மனைவி மற்றொருவருடன் டூவீலரில் செல்வதை பார்த்த கணவர் மீது காரை மோத விட்டு மனைவியை கடத்தினார்.

 

சாலைப்புதூரைச் சேர்ந்த பிரதீப் குமாரும், வேளாண் விரிவாக்க அலுவலக தற்காலிக ஊழியரான அவரது மனைவி நந்தினியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பிரிந்துள்ளனர்.

 

வேலா கவுண்டன்பட்டி நடைபெற்ற திமுக வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நந்தினி, சக ஊழியர் ஆன அசோகுமாருடன் வீடு சென்று கொண்டிருந்த பொழுது அவடியாக காரில் சென்ற பிரதீப் குமார் பார்த்துள்ளார்.

 

ஆத்திரமடைந்த பிரதீப் குமார் தமது காரை டூவீலர் மீது மோத செய்ததில் கீழே விழுந்து காயம் அடைந்த நந்தினி காரை தூக்கிப் போட்டுக்கொண்டு படுகாயம் அடைந்த அசோக்கை அங்கே விட்டு சென்றுள்ளார். இதை பார்த்து பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon