தந்தைக்கு மகன் கார் ஓட்ட சொல்லி கொடுத்த போது நடந்த விபரீதம்..!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் ஆம்னி கார் ஒன்று 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். புளியம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உறவினரின் ஆம்னி காரை தனது மகனுடன் ஓட்டி பழகிய பின்னர் அதனை தனது தோட்டத்தில் நிறுத்த முயன்றார்.
அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் இருந்த விவசாய கிணற்றில் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கிணற்றில் விழுந்தது. இதில் ராஜேந்திரன் ஆம்னி காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். 5 மணி நேரம் போராடி கிரேன் மூலம் ஆம்னி காருடன் ராஜேந்திரனின் உடலை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





