மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என வகுப்பறையில் பேசிய ஆசிரியர் கைது..!
பீகாரில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என பள்ளி வகுப்பறையில் பேசி ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் நரேந்திர ராஜா.
இவர் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம் பேசும் பொழுது ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி மக்கள் சாப்பிடும் வகையில் கூட இல்லை என குறிப்பிட்டு மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பெற்றோரிடம் ஆசிரியர் கூறியதை குறிப்பிட்டுள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.






