--- --:--:-- --

பள்ளி மாணவனுடன் ஓடிய ஆசிரியை..!

2

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து உள்ளார். கடந்த ஐந்தாம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று அந்த மாணவர் மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

 

பின்னர் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் மாணவரை தேடிப்பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

 

இதற்கிடையே மாணவர் படித்து வந்த பள்ளியில் 26 வயது பெண் ஆசிரியர் மாயமாகியது தொடர்பாக நேற்று மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனையடுத்து மாணவர் படித்த பள்ளியில் போலீசார் விசாரித்த போது அதே நாளில் ஆசிரியரும் மாயமானது தெரியவந்தது. ஆனால் ஆசிரியை மாயம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.

 

துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த ஆசிரியை எம்ஏ பிஎட் படித்துவிட்டு கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றிய தெரியவந்தது. மாணவரும் ஆசிரியரும் ஒரே நாளில் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon