பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்..கதறி அழுத மாணவர்கள்..!
ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் பெற்ற நிலையில் அவரை வழிமறித்து நின்று மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் பகுதியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் சந்தான லட்சுமி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அவரை வேறு பகுதி பள்ளிக்கு மாற்றி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சிறப்பாக பணியாற்ற வந்தவரை வேறுபள்ளிக்கு மாற்றியதால் அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் பெற்றோரும் ஆசிரியை வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என முறையிட்டு கேட்டுக் கொண்டனர்.
வகுப்பறை வாசலிலேயே ஆசிரியை தடுத்து நிறுத்திய மாணாக்கரும், பெற்றோரும் கண்ணீர் விட்டு அழுதது உருக்கமாக இருந்தது.






