--- --:--:-- --

அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஐந்து வழக்கறிஞர்கள் திடீர் நீக்கம்

5

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஹேமலதா உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் போக்சோ நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வருகின்றது.

 

தமிழகத்தில் 16 புதிய போக்சோ நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசு சார்பில் ஆஜராகி வாதாட வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட அந்த ஐந்து வழக்கறிஞர்களும் அதிரடியாக நீக்கப்பட்டு ,அரசுத் தரப்பில் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில் ஆஜராகி வரும் 16 புதிய உதவி வழக்கறிஞர்களை இந்த நீதிமன்றங்களில் வாதாட அரசு முடிவுசெய்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon