--- --:--:-- --

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை..தவறான புகார் அளித்த மாணவி..!

9

திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி கூறியது உண்மை அல்ல என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

தேனி மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி நேற்று தனது வீட்டில் இருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கியதாகவும் அப்பொழுது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இறக்கி விட்டதாகவும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

 

கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மாணவி மன அழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் பெற்றோர் வந்த பிறகே அவருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon