--- --:--:-- --

பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் காயம்..!

3

திருநெல்வேலியில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சென்ற அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கி சென்ற தனியார் பள்ளி மாணவன் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமாக இருந்து வருகின்றனர்.

 

ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் படிக்கட்டில் தொங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் பேருந்து இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தாலும் இயக்கப்படாமல் உள்ளது.

 

இந்த நிலையில் நேற்று மாலை நெல்லை சந்திப்பில் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கே தற்போது அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Right Menu Icon