ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார்..!
சென்னையில் நள்ளிரவில் ஊபர் ஆட்டோவில் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை தரமணியில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் பயிற்சி பத்திரிக்கையாளரான இளம்பெண் ஒருவர் நேற்றிரவு தனது தோழியுடன் ஈசிஆர் பகுதியிலிருந்து தங்கியிருந்த விடுதிக்கு உபர் ஆட்டோவில் வந்துள்ளார்.
அந்த மாணவியிடம் ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கூச்சலிட்டு உதவிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்தது குறித்து விவரித்துள்ளார்.
செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பெண் போலீஸ் ஒருவர் கூட இல்லாமல் தன்னை அலைக்கழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார். ஆட்டோ உட்பட புகைப்படங்களை ட்விட்டரில் மாணவி பதிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.





