இரவில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சமைத்து சாப்பிட்ட மாணவி..!
திருச்சியில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்ட 15 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். திருவரம்பூர் அருகே அரியமங்கலம் கீழே அபிநாபுரத்தைச் சேர்ந்த ஸ்டெபி என்பவர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் வழக்கம் போல் ஆன்லைனில் வாங்கிய நூடுல்ஸ் பாக்கெட்டை இரவு சமைத்து சாப்பிட்டு படுத்து உறங்கிதாக கூறப்படுகிறது. காலையில் அவர் உயிரிழந்ததால் தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஸ்டெஃபி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





