--- --:--:-- --

ராணுவ கனவு நிறைவேறாததால் விரக்தியில் தான் மகன் இவ்வாறு செய்தான்..!

4

வேலையில்லாத விரக்தியில் தனது மகன் இவ்வாறு செய்திருப்பான் என்று மக்களவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபரின் தாயார் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்ற மக்களவையில் கலர் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டுள்ள அமுல் சிண்டு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார் டிசம்பர் ஒன்பதாம் தேதி தனது மகனிடம் பேசியதாக தெரிவித்தார்.

 

வேலையில் சேர்வதற்காக மும்பை செல்வதாக கூறி சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மகன் ராணுவத்தில் சேர விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

வேலையில்லாமல் இருந்ததால் எங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற மனா அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்தார். தனது மகனின் விருப்பத்தை அரசு நிறைவேற்றுமாறு கூறியுள்ள அவர் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon