--- --:--:-- --

நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு சுற்றுலா சென்ற போது மாணவர்களுக்கு நடந்த சோகம்..!

3

மெரிக்காவில் மூளை சாவடைந்த நெல்லை மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்ற பொழுது சகாய ஜெபான் ப்ரஜோப் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி மூளை சாவடைந்தார். அமெரிக்காவிலேயே அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

 

அதன் பின் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடல் சொந்த ஊரில் புனித தேவாலயத்தில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அரசு ஆணை தெரிவித்து அவரது உடலுக்கு முழு உடல் அரசு மரியாதை வழங்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon