--- --:--:-- --

அலுவலர்களைச் சேரில் உட்கார கூடாது என கூறிய திமுக பெண் சேர்மன்..!

5

ரத்தநாட்டில் பொது நிதியில் வாங்கிய நாற்காலியில் அலுவலர்கள் அமரக்கூடாது எனக் கூறி நாற்காலிகளை எடுக்க சொன்ன திமுக பெண் சேர்மேனால் போராட்டம் வெடித்தது.

 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யூனியன் அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். திமுகவைச் சேர்ந்த யூனியன் சேர்மன் பார்வதி பொதுவெளியில் வாங்கிய நாற்காலியை வேலை அலுவலர்கள் பயன்படுத்தக்கூடாது எனக் கூறி உதவியாளர் மூலம் நாற்காலிகளை எடுக்க கூறியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த முப்பதுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்திற்கு வந்த சேர்மன் பார்வதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon