--- --:--:-- --

உயிருடன் உள்ள இளைஞர் இறந்து விட்டதாக நினைத்து கதறி அழுத உறவினர்கள்..!

5

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விஷம் அருந்திய இளைஞர் இறந்து விட்டதாக கூறி இளைஞர்கள் கதறி அழுத நிலையில் உயிரிழந்ததையடுத்து அவரை போலீசார் ஆம்புலன்ஸ் உதவியோடு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

பொன்னம்பட்டியில் இருந்த இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

சிகிச்சைக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

 

வீட்டின் அருகே கட்டிலில் படுக்க வைத்திருந்தவர் அசைவற்ற நிலையில் இருந்ததால் இறந்துவிட்டதாக நினைத்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து வாலிபரை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர். மேலும் துக்க நிகழ்விற்கான பணிகளையும் துவங்கியதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையில் அவர் கண்ணை திறந்து பார்த்து தான் நன்றாக இருப்பது போல் தலையை ஆட்டி உள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர், அனைவரும் அமைதியாகி உள்ளனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினரும் அங்கு வந்து இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

Right Menu Icon