தொடரும் மழை… பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மழை நீடிப்பதால் நாளையும் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விடுமுறை அறிவிப்பை காலையில் தெரிவிக்காமல் இரவே தெரிவித்தால் நன்றாக இருக்கும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






