--- --:--:-- --

பிரபல நடிகருக்கு ஜோடியான சார்பாட்டா பரம்பரை கதாநாயகி..!

11

டந்த வருடம் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் பசுபதி, துஷ்ரா விஜயன், கலையரசன், ஜான் கோக்கன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் கதாநாயகி துஷ்ரா விஜயன்.

 

சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது தொடர்ந்து மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாகநடிக்கிறாராம் நடிகை துஷ்ரா விஜயன். இப்படத்தை கவுதம் ராஜ் இயக்குகிறாராம். இவர் இதற்குமுன் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon