--- --:--:-- --

பொழுதுபோக்கு பூங்காவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது..!

10

பொழுதுபோக்கு பூங்காவில் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கேரள மத்திய பல்கலைக்கழக துணை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள விஸ்மயா பூங்காவில் அகமது என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார்.

 

குற்றம் சாட்டப்பட்டவர் காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக உள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் அகமதுவை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

அகமது மீது ஏற்கனவே மத்திய பல்கலைக்கழக மாணவி ஒருவர் இது போன்ற புகார் சுமத்தியுள்ள புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அகமது தற்பொழுது தான் மீண்டும் பணியில் இணைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon