--- --:--:-- --

ஹெல்மெட் போடாமல் சென்றதால் போலீஸார் கொடூர தாக்குதல்

6

ஹெல்மெட் அணிந்து செல்லாததால் கல்லூரி மாணவனை போலீசார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சரத் தனது நண்பருடன் இருசக்கர வாகனம் மூலம் வாழப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 

ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்ததை அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிவசக்தி பார்த்துள்ளார். இதனால் சரத்தை அவர் வழிமறித்து உள்ளார். ஆனால் சிவசக்தியை தாண்டி சென்று சரத் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த சிவசக்தி மாணவரை பூட்ஸ் காலால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாணவர் சரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon