ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை சீண்டிய நபர்..!
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எம்ஜிஆர் நகர் அருகே சட்டவிரோதமாக கல் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் அங்கு கல் குடிக்க வருபவர்களால் பிரச்சனை ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அந்த பகுதியில் கல் குடிக்க வந்த செல்லதுரை என்ற நபர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து கடுமையாக தாக்கியுள்ளார்.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் செல்லதுரையை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே செல்லதுரை அவர்கள் மேலும் இருவர் வந்ததாகவும் அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாகவும் கூறிய நிலையில் தப்பிய இருவரை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த பகுதியில் உள்ள கல்லு கடையை அகற்ற வேண்டும் எனவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





