--- --:--:-- --

10 ஆம் வகுப்பு படித்துவிட்டு போலி மருத்துவம் பார்த்த நபர் கைது..!

10

திருப்பத்தூர் அருகே பத்தாம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்.

 

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் 25 வருடங்களுக்கு மேலாக புதுப்பேட்டை இராஜகிரி தெருவில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 2012ல் போலி மருத்துவம் பார்த்ததாக கைதான அவர் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அதேபோல் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார்.

 

இந்த நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நடத்திய சோதனையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மருத்துவமனையில் இருந்த மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon