தவறை தட்டி கேட்ட நபரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய நபர்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விசைத்தறி பட்டு நெய்வதை தடுப்பதற்கு காட்டி கொடுத்த கைத்தறி நெசவாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைத்தறி பட்டுக்கு புகழ் பெற்ற ஆரணியில் கடந்த சில மாதங்களாக சிலர் விசைத்தறையில் பட்டுப்புடவையை நெசவு செய்து கைத்தறி பட்டு என்று கூறி விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் கைத்தறிவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோரிக்கை விடுக்க வந்தனர், ஆரணி அருகே உள்ள சக்தி நகரில் விசைத்தறையில் பட்டுப்புடவை நெய்யப்படும் இடத்தை அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவர் அதிகாரிகளிடம் காண்பித்ததாக தெரிகிறது.
அதை கண்ட விசைத்தறி நெசவாளர்களான நாகராஜ் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பாபு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





