ரோஜாவிடம் கல்யாணம் செய்து வைக்கக்கோரிய முதியவர்..!
ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தனது நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்களை நேரில் சென்று சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்பொழுது வந்த முதியவர் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். குபீர் என்று சிரித்த ரோஜா அரசால் உதவி தொகை மட்டும்தான் வழங்க முடியும் திருமணம் எல்லாம் செய்து வைக்க முடியாது என நகைச்சுவையுடன் தெரிவித்தார்.






