ரொனால்டோவை பின் தொடர்வோர் எண்ணிக்கை 20 கோடி
இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின் தொடர்பவர்களை கொண்டு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் வெளியிடும் படங்கள் மற்றும் செய்திகளை படிக்க சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது.
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் 20 கோடியைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரொனால்டோ. கால்பந்து வீரர் மெஸ்சி யை 14.1 கோடி பேரும், நயினலை 13.2 கோடி பேரும் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




