இளம் பெண்ணையும், தாயையும் அரிவாளால் தாக்கி விட்டு சென்ற மர்ம கும்பல்..!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நள்ளிரவில் இளம் பெண்ணை கடத்த முயன்ற இளைஞர்கள் அந்த பெண்ணையும் அவரது தாயையும் அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோகிலா என்பவரை கார்த்திக் என்பவர் காதலித்ததாகவும் இதனை கோகிலா ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோகிலாவை கடத்தி திருமணம் செய்ய கார்த்திக் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் பூட்டை உடைத்து கோகிலாவை தூக்கி செல்லும் நிலையில் அவரது தாய் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அந்த பெண்ணையும் அவரது தாயையும் அரிவாளால் தாக்கி விட்டு தப்பியோடினான். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் அதன் ஓட்டுநரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த அக்கம்பக்கத்தினர் தாயையும் மகளையும் மருத்துவமனையில் அனுமதித்தனர் .






