--- --:--:-- --

கல்லூரி பேருந்து பேக்கரிக்குள் புகுந்து விபத்து..!

5

சேலம் மாவட்டம் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி பேருந்து பேக்கரிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தனியார் மகளிர் கல்லூரியில் இருந்து 55 மாணவிகளை ஏற்றிக்கொண்டு கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் அந்த பேருந்து வலதுபுறம் திரும்பிய பொழுது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அதன் மீது மோதியது.

 

இதனையடுத்து அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பேக்கரிக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் 55 மாணவிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

 

Right Menu Icon