இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!
மத்திய பிரதேசத்தில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தூக்கி வீசப்படும் பதற வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதை தொடர்ந்து கம்பத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த நபர் தூக்கி வீசப்பட்ட கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






