குழந்தை பிறந்த வலியுடன் ஒரு மணி நேரத்தில் தேர்வு எழுத சென்ற தாய்..!
பீகாரில் குழந்தை பெற்ற சிறிது நேரத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 22 வயதான பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். பிஹார் மாநிலத்தில் உள்ள பெண் ருக்மணி குமாரி. இவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நிலையில் தனது 22 வது வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்தார்.
நிறைமாத கர்ப்பிணியான இவர் செவ்வாய்க்கிழமை தேர்வு எழுதி இருந்தார். மறுநாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டியது நிலையில் பிரசவ வலி ஆரம்பித்தது. எனினும் மறுநாள் தேர்வெழுத வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் தனது எண்ணத்தை குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மறுநாள் காலையில் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு சென்ற அவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் ருக்மணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்து நிலையில் தேர்வு எழுத வேண்டும் என்று விடாப்படியாக இருந்தவர் குழந்தை பெற்று சிறிது நேரத்திலேயே தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதினார்.






