முன்னாள் சென்ற பஸ் மீது மோதிய மினி பஸ்..!
பயணிகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மினி பேருந்து அசுர வேகமாக மோதிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்துக்கும் மினி பேருந்துக்கும் இடையே முந்தி செல்ல முயன்ற அதிவேகமாக வாகனத்தை இயக்கும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பயணிகளை ஏற்ற தனியார் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது பின்னால் வந்த மினி பேருந்து அசுர வேகத்தில் மோதியது. இதில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து நபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.






