--- --:--:-- --

கரூரில் அண்ணாமலையுடன் நடந்த சந்திப்பு..!

3

மிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சந்தித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமமுகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்த மேடை ஏறும் முன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சந்தித்த தினகரன் சில நொடிகள் அவரிடம் பேசினார்.

 

பின்னர், மணமக்களை வாழ்த்திவிட்டு வந்த டிடிவி தினகரனுக்கு சால்வை அணிவித்து அண்ணாமலை நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சில நிமிடங்கள் உரையாடினர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தோம்; அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை” என்றார். அதிமுகவை டிடிவி தினகரன் தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில் அண்ணாமலையுடனான இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

Right Menu Icon