பெண் காவலரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நபர்..!
சென்னையில் கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் பெண்கள் பெட்டியில் போதை ஆசாமி ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பெண் காவல தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
கடற்கரை ரயில் நிலையத்தில் கஞ்சா புகைக்கும் ஆசாமிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் வழி தெரியாத காவலர்கள் பணியமர்த்தப்படுவதாலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






