இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த லாரி..!
திருப்பத்தூரில் பிரேக் பிடிக்காமல் வீட்டிற்குள் புகுந்த லாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் சகாய நகர் பகுதியில் சாலை பணி நடைபெற்று வருகிறது. லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.
அதன்படி பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று அருள் என்பவரின் வீட்டில் இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து உள்ளது. இதில் கட்டிடம் சேதம் அடைந்துள்ள நிலையில் விபத்தின்போது வெளியே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.






