--- --:--:-- --

ரயில்,விமான சேவைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பேருந்து நிலையத்திற்கு அளிக்கப்படுவதில்லை

8

சேலம் மாவட்டத்தில் தற்போது ரயில் நிலையங்களுக்கு,விமான சேவைக்கும் அதிகளவில் முக்கியத்துவம் அழிக்கப்படுகிறது.வேறு மாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வருபவர்களுக்கும்,இங்கிருந்து திரும்பவும் சொந்த மாநிலத்திற்கு சொல்பவர்களுக்கு மட்டும் இந்த வசதி சிறப்பாக அமைகிறது.

 

ஆனால் ரயில் நிலையத்துக்கும், விமான சேவைக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம் இங்கு இருக்கும் பேருந்து நிலையங்களுக்கு அளிக்கப்படுவதில்லை.குறிப்பாக சொல்லப்போனால் பஸ்போட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதே தவிர இன்றுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை,சேலம் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி இன்றுவரை கிடப்பிலேயே உள்ளது .

 

தீபாவளி,பொங்கல் விடுமுறையின் பொழுது பேருந்தில் செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்பொழுது சேலம் ஜங்ஷன்,விமான நிலையத்திற்கு ஈடுகொடுக்கும் அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது,வரும் ஏப்ரல் மாதம் முதல் அதிக அளவில் விமான சேவையும் ,விமான நிலையம் விரிவாக்க பணி தொடங்கப்பட உள்ளது.

 

ஆனால் இன்றுவரை பேருந்து நிலையம் புதுப்பிக்கும்,விரிவாக்க பணிகள் கிடப்பிலேயே உள்ளன.ஆகையால் இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு அதிவேகமாக கிடப்பில் இருக்கும் பணிகளை மாநில அரசு முடிக்க வேண்டும் என்பதே சேலம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon