--- --:--:-- --

ரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்!

16

மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்தவர் பலமுறை அடிபட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காரக்பூர் எனும் இடத்தில் இருந்து அசான்சால் என்ற இடத்திற்கு விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.

 

அப்போது ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில் நிற்க முயன்றது. அப்போது சுஜாய் என்ற இளைஞர் இறங்க முற்பட்டார். ஆனால் கால் இடறி நடைமேடையில் விழுந்தார். விழுந்த வேகத்தில் ரயிலுக்குள் இழுக்கப்பட்ட அவர் அடுத்தடுத்து ரயில் பெட்டிகளிலும் படிக்கட்டிலும் மோதினார். இதனை கண்ட காவலர் ஒருவர் விரைந்து சென்று அவரை லாவகமாக இழுத்து காப்பாற்றினார்.

 

ரயிலில் மோதிய வேகத்தில் சுற்றியிருந்த சுஜாய் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பினார். சில நொடிகள் தாமதித்து இருந்தாலும் ரயில் பெட்டிக்குள் இழுக்கப்பட்டு உயிரிழக்க இருந்த சுஜாயை காப்பாற்றிய காவலரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon