மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய குடும்பம்..!
மதுரையில் மகளின் திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் அமிர்தா.
இவருக்கும் பாலகுமாரன் என்பவருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களது திருமணத்திற்கு வந்த மொய் பணம் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்க இருப்பதாக மணப்பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
மணப்பெண் குடும்பத்தினர் இந்த செயல் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




