--- --:--:-- --

விவசாயியின் உடலுக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்..!

1

பெரியபாளையம் அருகே மூளை சாவடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மலர்களையும் வைத்து மரியாதை செலுத்தினார்.

 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் உமா சந்திரன். விவசாயியான இவர் சமூக ஆர்வலராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்தாண்டு விபத்து ஒன்றில் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி விழுந்து மூளை சாவடைந்தார்.

 

இந்த நிலையில் உமா சந்திரனின் உடலை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

 

இதனை தொடர்ந்து உமா சந்திரன் உடல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ரவி அரசு மரியாதை உடன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உமா சந்திரனின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் கூறினார். உடல் உறுப்புகள் தானம் செய்து உமா சந்திரனுக்கு அருணா என்ற மனைவியும் வேல்முருகன் சிகானந்தம் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

 

Right Menu Icon