நடனம் ஆடிய மணமகனின் தோழர் சட்டென உயிரிழப்பு..!
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகனின் தோழி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மணமகளுக்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் செய்ய முடிவானது.
இவர்களது திருமண நிகழ்வில் கலந்து கொள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக வந்தனர். இதில் மணமகனின் தோழர் கலந்துகொண்டு திருமண ஊர்வலத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடிய படியே சென்றார். அப்பொழுது மணமகனின் தோழன் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நடனமாடி கொண்டிருந்த மணமகனின் தோழர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






