--- --:--:-- --

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வடிகால் குட்டையில் மூழ்கி பலி..!

10

டலூர் மாவட்டம் செட்டியார் குப்பம் பகுதியில் இரண்டு வயது ஆண் குழந்தை வடிகால் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தை சேர்ந்த இளம் பருதி என்பவரின் இரண்டு வயது ஆண் குழந்தை ரக்சன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென காணாமல் போயுள்ளான்.

 

இதையடுத்து குழந்தையின் குடும்பத்தினர் தேடிய நிலையில் வீட்டின் அருகில் இருந்த வடிகால் குட்டையில் குழந்தை சடலமாக கிடந்துள்ளது. போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon